போகோ விசைப்பலகையுடன் வெளிவரும் புதிய சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்3.!
இந்தியாவில் சாம்சங் அறிமுகப்படுத்தும் அனைத்துப் பொருட்களுமே சிறந்த தரம் வாய்ந்தவையாக உள்ளது, மேலும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்3 ஸ்னாப்டிராகன் 820 எஸ்ஒசி உடன் வெளிவருகிறது.
இந்த டேப் பொறுத்தமட்டில் இயக்கத்திறக்கு மிக அருமையாக இருக்கும் எனக் கூறப்படுகிறது, மேலும் இவை 2017-ல் அறிமுகப்படுத்தப்பட்ட சிறந்த டேப்-ஆக இருக்கும் எனக் கூறப்படுகிறது
கேமரா:
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்3 பின்புற கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ், 4கே வீடியோ ரெகார்டிங் ஆதரவு கொண்டுள்ளது.
சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது. மற்றும் 32ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும் 128ஜிபி வரை மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.
சாப்ட்வேர்:
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்3 பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. 1.6ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 820 எஸ்ஒசி செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.0 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.
இணைப்பு ஆதரவுகள்:
இவற்றில் இடம்பெற்றுள்ளன இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன.அவை வைஃபை 802.11, ப்ளுடூத் 4.2 ,ஜிபிஎஸ்,யுஎஸ்பி-3.1,3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன.
பேட்டரி:
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்3 பொருத்தவரை 6000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த டேப்.