இசெட்இ ஸ்மால் பிரெஷ்4 கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் பல வரவேற்ப்பை பெற்றது, தற்போது 4ஜிபி ரேம் உடன் இசெட்இ ஸ்மால் பிரெஷ் 5 அறிமுகப்படுத்தப்படுகிறது, இவை பல்வேறு எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
சாம்பல், பசுமை,நேர்த்தியான தங்கம் மற்றும் நீலம் போன்ற வண்ணங்களில் இந்த ஸமார்ட்போன் கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் இயக்குவதற்க்கு மிக அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
டிஸ்பிளே:
இக்கருவி 5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே மற்றும் (720-1280) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
கேமரா:
இசெட்இ ஸ்மால் பிரெஷ் 5 ரியர் கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை, மற்றும் முன்புற செல்பீ கேமரா 5 மெகா பிக்சல் கொண்டவையாக இருக்கிறது. மேலும் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.
சேமிப்பு திறன்:
இந்தக்கருவி 4ஜிபி ரேம் கொண்டுள்ளது, மற்றும் 16ஜிபி வரை மெமரி கொண்டுள்ளது, மேலும்32ஜிபி வரை மெமரி நீட்டிப்புஆதரவு கொண்டவையாக இந்த ஸ்மார்ட்போன் உள்ளது.
சாப்ட்வேர்:
இசெட்இ ஸ்மால் பிரெஷ் 5 பொறுத்தமட்டில் ஒரு தனிக்குழுமம் அமைத்து சாப்ட்வேர் அமைக்கப்பட்டுள்ளது. குவாட்கோர் 1.4ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் மற்றும் ஸ்னாப்டிராகன் 425 எஸ்ஒசி செயலி இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 7.1 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.
இணைப்பு ஆதரவுகள்:
வைஃபை 802.11, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ், 4ஜிஎல்டிஇ போன்ற இணைப்பு ஆதரவுகள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளது.
பேட்டரி:
இசெட்இ ஸ்மால் பிரெஷ் 5 பொருத்தவரை 2500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி. இன்டர்நெட் போன்ற பயன்பாடுகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன்.
விலை:
இதன் விலை பொறுத்தமட்டில் ரூபாய்.13,200க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது.