Sunday, June 25, 2017

லீக்ஸ் : அசுஸ் சென்போன் பெகாசஸ் 4ஏ (அம்சங்கள் மற்றும் விலை நிர்ணயம்).!

அசுஸ் நிறுவனம் சென்போன் பெகாசஸ் 4ஏ என்றவொரு புதிய ஸ்மார்ட்போனை வெளியிடவுள்ளதாகவும், அதன் எதிர்பார்த்த குறிப்புகள் மற்றும் விலையிடல் ஆகியவற்றோடு சேர்த்து லீக்ஸ் தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்போன் பெகாசஸ் 4ஏ பற்றி வெளியான தகவல்களிலேயே மிகவும் சிறப்பான அம்சமாக அதன் இரட்டை பின்புற கேமரா அமைப்பு திகழ்கிறது.
கருப்பு மற்றும் சாம்பல் நிற கலவையில் காட்சியளிக்கும் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ள படத்தின் படி, வெளித்தோற்றத்தில் ஒரு பாலிகார்பனேட் பாடி கொண்டுள்ளது. மேலும் எல்இடி பிளாஷ் லைட் மற்றும் அசுஸ் லோகோவுடன் தொலைபேசியின் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பையும் பார்க்க முடிகிறது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

மேலும் இந்த அசுஸ் அதன் முன்பக்கம் ஹோம் பொத்தானை கொண்டுள்ளது. மேல் பக்கம் ஒரு 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் கீழே ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளது. வால்யூம் மற்றும் ஆற்றல் பொத்தானை இந்த சாதனம் அதன் வலது பக்கத்தில் கொண்டுள்ளது.
டிஸ்பிளே

டிஸ்பிளே

வெளியாகியுள்ள கசிவை பொறுத்தவரை, அசுஸ் சென்போன் பெகாசஸ் 4ஏ ஆனது 720x1280 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட ஒரு 5 அங்குல எச்டி டிஸ்பிளே கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது மற்றும் ஒரு மீடியா டெக் எம்டி6737 செயலி மூலம் இயக்கப்படுகிறது.
பேட்டரி

பேட்டரி

3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்ளடக்கிய நினைவகம் இணைந்து இது அண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் மற்றும் 4100 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது.
கேமரா

கேமரா

கேமரா துறையை பொறுத்தமட்டில் எல்இடி ப்ளாஷ் கொண்ட 13 மெகாபிக்சல் மற்றும் 8 மெகாபிக்சல் கேமரா கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பு மறுபக்கம் செல்பீ மற்றும் வீடியோ அரட்டைகளுக்கு 5 மெகாபிக்சல் முன்பக்க ஸ்னாப்பர் கொண்டிருக்கும்.
விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

மேலும், அளவீட்டில் இந்த கைபேசி 144.26 x 71.26 x 9.1 மிமீ பரிமாணமும், 160 கிராம் எடையும் கொண்திருக்கலாம்.மேலும், அசுஸ் சென்போன் பெகாசஸ் 4ஏ ஸ்மார்ட்போன் ஆனது 1799 யுவான் என்ற, அதாவது சுமார் ரூ 16,900/- என்ற விலை நிர்ணயம் பெறலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது வரையிலாக, வரவிருக்கும் இந்த அசுஸ் ஸ்மார்ட்போன் பற்றிய லீக்ஸ் தகவல்கள் மட்டுமே கிடைத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Lorem ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Comments


EmoticonEmoticon