Sunday, June 25, 2017

கம்ப்யூட்டரில் உள்ள பயாஸ்(BIOS) குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா?

நீங்கள் உங்களுக்கே சொந்தமான ஒரு கம்ப்யூட்டரை வாங்கி பயன்படுத்த முடிவு செய்து விட்டீர்களா? அப்படியென்றால் பயாஸ் என்பது என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதை தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல, ஆனாலும் முடியாததும் அல்ல
கம்ப்யூட்டரில் உள்ள பயாஸ்(BIOS) குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா?
பயாஸ்(BIOS) என்பதின் விரிவாக்கம் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். Basic Input Output System என்பதுதான் பயாஸின் விரிவாக்கம். உலகில் உள்ள அனைத்து கம்ப்யூட்டரிலும் இந்த பயாஸ் இருக்கும். உலகம் முழுவதும் பயன்படுத்தப்பட்டும் இந்த புரோக்ராம், கம்ப்யூட்டரின் மதர்போர்டில் உள்ள ஒரு சிறிய சிப்-இல் அடங்கியிருக்கும்.
இதுதான் கம்ப்யூட்டரையும், அதில் உள்ள ஆபரேசன் சிஸ்டத்தையும் கட்டுப்படுத்துகிறது. மேலும் ஹார்ட் டிரைவ்கள், வீடியோ கார்டுகள், கீபோர்டு, மவுஸ், பிரிண்டர் மற்றும் கம்ப்யூட்டரில் இணைக்கும் அனைத்தையும் கட்டுப்படுத்துவது இந்த பயாஸ்தான்
கம்ப்யூட்டரில் உள்ள பயாஸ்(BIOS) குறித்து தெரிந்து கொள்ள வேண்டுமா?
ஒவ்வொரு முறை கம்ப்யூட்டரை பூட் செய்யும்போது, பயாஸ், அதில் என்ன நடக்கின்றது என்பதை நமக்கு தெரிவிக்கும். உதாரணமாக கம்ப்யூட்டரில் எத்தனை ரேம் உள்ளது, அவற்றில் எவ்வளவு பயன்படுத்தப்படுகிறது, எந்த ஹார்ட் டிரைவ் முதலில் பயன்படுத்தப்படுகிறது உள்பட பல விஷயங்களை நமக்கு அளிக்கும். ஐபிஎம் நிறுவனம் கண்டுபிடித்த இந்த பயாஸ், ஹார்ட்வேரை டெஸ்ட் செய்யவும் பயன்படும், மேலும் ஓஎஸ் இன்ஸ்டால் செய்யவும் கண்டிப்பாக பயாஸ் வேண்டும்
ஒரு கம்ப்யூட்டரில் உள்ள பயாஸ் பகுதிக்கு செல்ல அனைத்து கம்ப்யூட்டருக்கும் பொதுவான வழி இல்லை. ஒவ்வொரு கம்ப்யூட்டரில் அமைந்துள்ள மதர்போர்டை பொறுத்து அதற்குரிய பல கீகளை செயல்படுத்துவதன் மூலம் பூட் பகுதிக்கு செல்ல முடியும்.
ஒவ்வொரு முறை பூட் செய்யும்போதும் நீங்கள் கவனமாக எந்தெந்த பட்டன்களை அழுத்த வேண்டும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை கவனித்தால் பயாஸ் செட்டிங் உங்களுக்கு எளிதாக புரிந்துவிடும். பயாஸ் பகுதிக்கு ஒரு தடவை நீங்கள் சென்றுவிட்டால் அதன் பின்னர் பூட் ஆப்சனை மாற்றுவது உள்பட அனைத்து பணிகளையும் எளிதாக முடித்துவிடலாம்.

Lorem ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Comments


EmoticonEmoticon