Sunday, June 25, 2017

ப்ளிப்கார்ட் சாம்சங் கார்னிவல் விற்பனை : ஸ்மார்ட்போன்கள் முதல் டிவிக்கள் வரை.!

ப்ளிப்கார்ட் சாம்சங் கார்னிவல் விற்பனை : ஸ்மார்ட்போன்கள் முதல் டிவிக்கள் வரை.!

]
ப்ளிப்கார்ட் நிறுவனம் அதன் சாம்சங் கார்னிவல் விற்பனையை அறிவித்துள்ளது. இந்த 'சாம்சங் கார்னிவல்' ஆனது ஜூன் 13 முதல் ஜூன் 15 வரை ப்ளிப்கார்டில் நடைபெறும். இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள் முதல் டிவிக்கள் வரை சாம்சங் நிறுவன தயாரிப்புகளுக்கு பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது.

ஸ்மார்ட்போன்கள் மீதான தள்ளுபடிகளை பார்த்தால் பயனர்கள் ரூ.5,000/- விலைகுறைப்பில் சாம்சங் கேலக்ஸி சி9 ப்ரோ ஸ்மார்ட்போனை இதன் விற்பனையில் வாங்கலாம். இதற்கிடையில், சாம்சங் கேலக்ஸி ஆன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் 64ஜிபி மாறுபாடு தற்போது தள்ளுபடி விலையில் ரூ. 14,900 ரூபாய்க்கு கிடைக்கிறது.

கேலக்ஸி ஆன் 7

கேலக்ஸி ஆன் 7

மேலும், கேலக்ஸி ஆன் 7 மற்றும் கேலக்ஸி ஆன் 5 ஆகியவை முறையே ரூ.800 மற்றும் ரூ.2,300/- விலைகுறைப்பு நிகழ்த்தப்பட்டு முறையே ரூ.7,690/- மற்றும் ரூ.6,690/- என்ற விலைக்கு விற்பனைக்கு உள்ளது.
எல்இடி டிவி

எல்இடி டிவி

ப்ளிப்கார்டின் படி, திருவிழாவின் போது சாம்சங் டி.வி.க்களின் விலை 50 சதவிகிதம் வரை குறைக்கப்படும். சாம்சங் 32 அங்குல எச்டி ரெடி எல்இடி டிவி, சாம்சங் 24 இன்ச் எச்டி ரெடி எல்இடி டிவி, சாம்சங் 60 அங்குல அல்ட்ரா எச்டி (4 கே) ஸ்மார்ட் எல்இடி டிவி, சாம்சங் 40 அங்குல முழு எச்டி எல்இடி டிவி, சாம்சங் 49 அங்குல அல்ட்ரா எச்டி (4கே) ஸ்மார்ட், கர்வுடு எல்இடி டிவி மற்றும் பல இந்த சலுகையின் கீழ் அடங்கும்.

Lorem ipsum is simply dummy text of the printing and typesetting industry.

Comments


EmoticonEmoticon