கேலக்ஸி எஸ்8 ஆக்டிவ் : அடேங்கப்பா இதென்ன ஸ்க்ரீன் ரெசல்யூஷன்.?
சாம்சங் ஒவ்வொரு ஆண்டும் அதன் தலைமை கேலக்ஸி எஸ் தொடர் ஸ்மார்ட்போன்களில் முரட்டுத்தனமான மாறுபாட்டை அறிமுகப்படுத்தும் என்பது நாம் அறிந்த ஒன்றே. அவ்வண்ணம் இந்த ஆண்டு, நிறுவனம் எப்போது வேண்டுமானாலும் அதன் கேலக்ஸி எஸ்8 ஆக்டிவ் ஸ்மார்ட்போனை தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் வெளியாகுமென்று எதிர்பார்க்கப்படும் எஸ்8 ஆக்டிவ் ஸ்மார்ட்போனின் முக்கிய குறிப்புகள் கீக்பெஞ்ச் தரப்படுத்தல் தரவுத்தளத்தில் வெளிப்படுத்தப்பட்டது. இப்போது கேலக்ஸி எஸ்8 ஆக்டிவ் சார்ந்த மற்றொரு பெஞ்ச்மார்க் பட்டியல் வெளியாகியுள்ளது. இம்முறை முரட்டுத்தனமான மாறுபாட்டை அட்டவணையில் காணமுடிகிறது மற்றும் அதையே வெளிவருமென்று எதிர்பார்க்கலாம். தற்போது வெளியாகியுள்ள அம்சங்களை பொறுத்தமட்டில் இக்கருவி 2008x1080 பிக்சல்கள் என்றவொரு வித்தியாசமான திரை தீர்மானம் கொண்ட ஒரு 5.4 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
ஸ்க்ரீன் ரெசல்யூஷன்
மேலும் கூறப்படும் கேலக்ஸி எஸ்8 ஆக்டிவ் கருவியின் திரைத்தீர்மானம் தவறான ஒன்றாக கூட இருக்கலாம் ஏனெனில் அம்சங்கள் மற்றும் செயல்திறன் சார்ந்த தகவல்களில் இந்த பெஞ்ச்மார்க் பட்டியலை நம்ப முடியாது. இந்த சாதனம் ஏன் மிகவும் குழப்பமான ஸ்க்ரீன் ரெசல்யூஷன் கொண்டு பட்டியலிடப்பட்டுள்ளது என்பதில் தெளிவு இல்லை.
ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி
மேலும் வெளியான அம்சங்கள் சார்ந்த விவரங்களை பொறுத்தமட்டில் சாம்சங் கேலக்ஸி எஸ்8 ஆக்டிவ் 10என்எம் செயல்முறை அடிப்படையிலான சக்தி வாய்ந்த ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 835 எஸ்ஓசி கொண்டு இயங்கும் என்று பட்டியல் காட்டுகிறது.
4 ஜிபி ரேம்
மேலும் அட்ரெனோ 540 கிராபிக்ஸ் மற்றும் 4 ஜிபி ரேம் கொண்டிருக்கும் கூறப்படுகிறது. உடன் 54ஜிபி சேமிப்புத்திறன் கொண்டிருக்கும் என நம்பப்படுகிறது, அதில் 53ஜிபி மட்டுமே பயனர்களுக்கு கிடைக்கும்.
கேமரா
கேமரா துறையை பொறுத்தமட்டில் கேலக்ஸி எஸ்8 ஆக்டிவ் ஆனது 12எம்பி பிரதான ஸ்னாபரை அதன் பின்புறத்தில் இடம்பெறச் செய்யும் என்று பட்டியலிடப்பட்டுள்ளது மற்றும் செல்பீ கேமரா அளவு சார்ந்த எந்த தகவலும் இல்லை.
ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட்
இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் (பெட்டிக்கு வெளியே) அடிப்பைடையிலான டச்விஸ் யூஐ கொண்டு இயங்கக்கூடும். இப்போது வரை, சாம்சங் நிறுவனத்திடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வரவில்லை என்பதும் கேலக்ஸி எஸ்8 ஆக்டிவ் பற்றிய மேலும் பல விவரங்களை தெரிந்து கொள்வதற்கு நாம் காத்திருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.